அம்மா என்றழைக்காத உயிரில்லையே……..
இலங்கையின் எழில் கொஞ்சும் கோண்டாவிலில் பொன்னையா, சோதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகள் பரமேஸ்வரி 8.12.1931 அன்று பூமியில் பிறந்தார் இவருடன் ஊடவே ஓர் அண்ணனும், இரண்டு தம்பிகளும், நான்கு தங்கைகளும் பிறந்தனர்.
பரமேஸ்வரி தனது 18 வது வயதில் இலங்கை யாழ்பாணம் சங்கானையை பிறப்பிடமாக கொண்ட தன்னைவிட 19 வயது கூடிய மணாளன் ஐயாத்துரை என்ற இயற்பெயரையும் செல்வம் என்ற புனை பெயரையும் கொண்ட ஆண் அழகனுடன் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்தார்.
அம்மா இரண்டாவது குழந்தை பெற்ற அன்றைய காலத்தில் சோதிப்பிள்ளை தாயார் தனது கடைசி மகளையும் பெற்றார். தாயும் மகளும் குழந்தை பெற்ற காலமது…
கணவருடன் சேர்ந்து கடைக்கு தேள்வையான எல்லா வேலையும் செய்து வந்தார். மண்குடிசையில் உயிராக நேசித்த எல்லா குழந்தை செல்வங்களையும் பெற்று சீரும் சிறப்புடனும் வளர்தார் . மின்சாரம் இல்லாத அன்றைய காலத்தில் மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்திலே எல்லா நிகழ்வும் நடைபெறவுள்ளது.
முக்கியமாக மூன்று நேரச் சமையலக்கும் காய்ந்த மரங்களே பயன்படும்.
அம்மா என்ற தாயை வர்ணிப்பதற்கு பிள்ளைகளிடம் பலநூறு கதைகள் இருக்கிறது .
அவற்றை அவர்கள் வாய் மொழியில் கேட்கும் போதே தனித்துவம் பெறும்………
எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தாலும் அதை கண்டு கொள்ளாமல் கடந்து செல்லும் வைராக்கியம் பரமேஸ்வரி என்ற தாயின் தாய்மைக்கு நிகர் அவரே!!!!
ஒரு பிள்ளை பெற்று வளர்பதே கஸ்டம் என்று இன்றைய தலைமுறை பெண்கள் கண்ணீர் விடும் காலத்தில்…
பத்து பிள்ளை பெற்று வளர்த்த தாயை போற்றுவதற்கு வார்த்தைகளே இல்லை.
எத்தனையோ தடவை குடும்பத்தில் முரண்பட்டு பிறந்த தாய் வீடு சென்ற போதும் யாரும் பிரித்து வைக்க முயலவில்லை. இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் முன் உதாரணமாக வாழ்ந்து . 15 பேரக்குழந்தைகளை பார்த்த பெருமையுடன்
தனது 63வது 24 .07.1995 வயதில் இயற்கை எய்திய தாயையும் கண்ணீர் மல்க நினைவு கூற வேண்டிய தருணம்.
தாய் தந்தையர் கண் முன் பிள்ளையின் இறப்பு கொடிதிலும் கொடியது
தாய் தந்தையர் இறந்த பின் ஓர் உறவின் இழப்பு எங்கள் ஒன்பது பேரிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!!!!!
ஆக்கம்,
சக்திசடாச்சரம் ஐயாத்துரை.